அகமதாபாத்தில் ஆஸ்ரமம் நடத்தி நன்கொடை வசூலிக்க பெண்களை பயன்படுத்தி வந்த நித்யானந்தா தற்போது தனக்கென்று ஒரு தீவு வாங்கி, அதற்கு 'கைலாஸ்' என்று பெயரிட்டு, தனிக் கொடி அமைத்து, சட்டம் மற்றும் முத்திரை உருவாக்கி இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திணறும் காவல் துறை
நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று அகமதாபாத் காவல் துறை திணறி வரும் நிலையில் தனக்கென்று கைலாஸ் என்ற பெயரில் ஒரு நாட்டை அமைத்து சட்டத்தை இயற்றி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனி இணையதளம்
இந்த செய்தி தற்போது இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது. தனது நாட்டுக்கு என்று தனி இணையத்தையும் உருவாக்கி இருக்கிறார். அதில், தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்து இறையாண்மை நாடு
இந்து இறையாண்மை நாடு' என்று அந்த கைலாஸ் நாட்டுக்கு பெயரிட்டு அமைச்சரவையையும் ஏற்படுத்தி இருக்கிறார். அந்த நாட்டுக்கு பிரதமரும் அமர்த்தப்பட்டு இருக்கிறார்