குடியுரிமை என்னும் விவகாரம் மதத்திற்கு அப்பாற்பட்டது. மதத்தை அளவுகோலாகக் கொண்டு குடியுரிமையை நிர்ணயிக்கக்கூடாது என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்திப் பேசினர். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் “ இந்த நாள் ஒரு கருப்பு தினம்” என்று பேசினார்.
அமித்ஷாவுக்கு தடை
இந்த சட்டத்திருத்தம் குறித்து, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க்ப்பட்டதாவது
“ குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இந்தியாவின் மதசார்பற்ற பன்முகத்தன்மைக்கும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற கருத்துக்கும் இழுக்காக அமைந்துள்ளது.இந்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது.
இது இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதன்மை தலைவர்கள் மீது, அமெரிக்க அரசு, தடை கொண்டுவர வேண்டும்” இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அரங்கில் இந்தியாவுக்கு இருக்கும் முக்கியமான பெருமைகளுள் ஒன்று இந்தியாவின் மதம் சாரா அரசியலமைப்பு முறை. இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் இந்தியா ஒரு மத அடிப்படைவாத நாடாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.