குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால், அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களில் சிலருக்கு தடைவிதிக்க வேண்டும் என சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.
இரவோடு இரவாக மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா. 311-80 என்ற கணக்கின்படி ஆதரவு பெற்று மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
கடந்த முறை மாநிலங்களவையில் நிறைவேறாமல் போன இந்த சட்டத் திருத்தத்தை, இந்த முறை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று பாஜக அரசு முயன்று வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதனை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
என்ன மசோதா இது:
1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட்ட குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் மசோதா இது.
அதாவது, பாகிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து வந்த மக்களில் இஸ்லாமியர்கள் நீங்கலாக இந்துகள், பார்சிகள்,பௌத்தர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட 14 பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதில் விதிகளை தளர்த்தியுள்ளது. குறைந்தபட்சம் வாழ்ந்திருக்க வேண்டிய கால அளவு, 11ஆண்டுகளாக இருந்தது. தற்போது இந்த சட்டத்திருத்தத்தில் அதனை 6 ஆண்டுகளாகவும் குறைத்துள்ளது.