பல்வேறு செயற்கைக்கோள்களை ஏந்திக் கொண்டு பி.எஸ்.எல்.வி-சி48 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இதன் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.
என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமியை கண்காணிப்பதற்காக இந்தியாவின் ”ரிசாட்-2பிஆர்1” என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி48 ராக்கெட் மூலம் செலுத்தப்படுகிறது.
இன்று பிற்பகல் 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதனுடன் இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள் ஆகியவை அனுப்பப்படுகின்றன.